திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

இறங்குமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை: இன்று பெட்ரோல் ரூ.4, டீசல் ரூ.2 குறைந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 19 நாள்களாக சரிந்து வருகிறது. இதன் காரணமாக, பெட்ரோல் விலை இதுவரை லிட்டருக்கு

News image
Updated On :5 நவம்பர் 2018, 2:31 am

புதுதில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 19 நாள்களாக சரிந்து வருகிறது. இதன் காரணமாக, பெட்ரோல் விலை இதுவரை லிட்டருக்கு ரூ.4.28-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.54-ம் குறைந்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் தொடங்கி, இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது விலை சற்று குறைந்து வருவது ஆறுதலான விஷயமாக இருக்கிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 21 பைசாவும் திங்கள்கிழமை குறைக்கப்பட்டதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

இதன்படி, கலால் வரி மிகக் குறைவானதாகக் கருதப்படும் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.56-ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.73.16-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

நாட்டிலேயே மிக அதிகமாக கலால் வரி விதிக்கப்படும் மும்பையில், இன்று திங்கள்கிழமை பெட்ரோல், டீசலின் விலை முறையே ரூ.82.06 மற்றும் ரூ.76.67-ஆக இருந்தது.

விலை ஏறியது எப்படி?: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டதாலும் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

கடந்த மாதம் 4-ஆம் தேதி பெட்ரோல், டீசலின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் தில்லியில் ரூ.84-ஆகவும், மும்பையில் ரூ.91.34-ஆகவும் இருந்தது. டீசல் லிட்டருக்கு ரூ.75.45 என்ற அளவில் தில்லியிலும், ரூ.80.10 என்ற அளவில் மும்பையிலும் அன்றைய தினத்தில் விற்பனை செய்யப்பட்டது. 

ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரையில்,  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.86-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.73 என்ற அளவிலும் அதிகரித்து காணப்பட்டது.

அதே நாளில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.1.50 காசுகள் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்ததுடன், எண்ணெய் நிறுவனங்கள் மேலும் ரூ.1 குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆக மொத்தம், இரண்டின் விலையிலும் ரூ.2.50 வரை குறைக்கப்பட்டது.

இருப்பினும், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, அக்டோபர் 17-ஆம் தேதி வரையில் பெட்ரோல், டீசலின் விலை ஏறுமுகமாகவே இருந்தது. அதற்கு அடுத்த நாளில் இருந்து அவற்றின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இனி வரும் நாள்களில், பெட்ரோல், டீசலின் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.