வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.26 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 77.85 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:12 pm

ANI


புதுதில்லி: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.26 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 77.85 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை ராக்கெட் வேகத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதையடுத்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இதைத் தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை மீதான கலால் வரியில் ரூ.2.50-ஐ மத்திய அரசு குறைத்தது. பிற மாநிலங்களையும் வாட் வரியை குறைக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டும் பெட்ரோல்-டீசல் விலை மீதான வாட்  வரியை குறைத்தன. இதன்பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்ததையடுத்து, பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. எனினும், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறையத் தொடங்கியதால், கடந்த 18 ஆம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை இந்தியாவிலும் குறைக்கப்பட்டது.

கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து  பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வந்தது விவசாயிகள், வாகன ஓட்டிகள், வணிகர்களிடையே சற்று மகிழ்ச்சியை அளித்து வரும் சம்பவமாக உள்ளது. 

இந்நிலையில், பெட்ரோல் விலை தொடர்ந்து 15 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமையும் (நவ.1) குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.26 ஆகவும், டீசல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் டீசல் ரூ.77.85-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்த விலை குறைப்பைத் தொடர்ந்து, தலைநகர் தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.18 ஆகவும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.64 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.68-க்கு விற்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.18 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படுவது இது 16ஆவது நாளாகும். கடந்த 16 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.3.83 ஆகவும், டீசல் விலை ரூ.2.18 ஆகவும் குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.