கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு
நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 28 வயது இளைஞர் மரணம் அடைந்ததை அடுத்து, கேரளாவில் நிபா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.


நிபா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 28 வயது இளைஞர் மரணம் அடைந்ததை அடுத்து, கேரளாவில் நிபா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
கரசேரி பகுதியைச் சேர்ந்த அகில் என்ற இளைஞர் நிபா வைரஸ் பாதித்து கடந்த 29ம் தேதி முதல் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.
நிபா வைரஸால் உயிரிழந்தவர்களுடன் இருந்த மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்த 1,353 பேர் தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நிபா வைரஸ் பாதித்து நெல்லிக்கோட் பகுதியில் சிகிச்சை பெற்று வந்த மதுசூதனன் (55) நேற்று மரணம் அடைந்ததாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...