மணிப்பூர் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

என் தந்தையை மோடியுடன் ஒப்பிட வேண்டாம்: லால் பகதூர் சாஸ்திரியின் மகன்

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை, பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என்று அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அனில் சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.

News image
Updated On :30 மே 2018, 7:21 am


போபால்: முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை, பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என்று அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அனில் சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.

போபாலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் அனில் சாஸ்திரியிடம், யார் சிறந்த பிரதமர், லால் பகதூர் சாஸ்திரியா அல்லது தற்போதைய பிரதமர் மோடியா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அனில் சாஸ்திரி, எனது தந்தையை பிரதமர் மோடியுடன் ஒப்பிட வேண்டாம். காதி ஆடைகளையும், குர்தாவையும்தான் என் தந்தை விரும்பி அணிவார். ஆனால் தற்போதைய பிரதமர் மோடி ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆடைகளையே விரும்புகிறார் என்று கூறினார்.

மேலும், 1960ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார். 

அதாவது, என் தந்தை பிரதமரானதும், ஒரு கார் வாங்குமாறு கூறினோம். அவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.5 ஆயிரம் கடன் பெற்று கார் வாங்கினார். ஆனால் சில மாதங்களிலேயே அவர் இறந்துவிட்டார். கடனை செலுத்தாமல் அவர் இறந்து விட்டதால், அந்த கடன் தொகையை எனது தாய், தனக்குக் கிடைத்த ஓய்வூதியத் தொகையில் இருந்து செலுத்தி கடனை அடைத்தார்.

ஆனால், தற்போதைய பிரதமர் மோடி ஆட்சியில், நீரவ் மோடி அதே வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்குக் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளார் என்று அனில் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.