நீண்ட இழுபறிக்குப் பிறகு கர்நாடகாவின் முதல்வராக குமாரசாமி நேற்று (புதன்கிழமை) பொறுப்பேற்றார்.
முன்னதாக, 2 நாட்கள் முதல்வர் பதவி வகித்த பாஜகவின் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக ராஜிநாமா செய்தார். இந்த ராஜிநாமாவின் போதே காங்கிரஸ் ஆதரவுடன் பெரும்பான்மை உள்ளதால் மஜதவின் குமாரசாமி அதிகாரப்பூர்வமற்ற வகையில் முதல்வர் ஆகிவிட்டார்.
இதையடுத்து, அவர் தொடர்ச்சியாக பல கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார். எடியூரப்பா ராஜிநாமா செய்தது முதல் தற்போது வரை குமாரசாமி சென்ற கோயில் மற்றும் சுவாமிகளை சந்தித்த விவரம்:
- எடியூரப்பா ராஜிநாமா செய்த சனிக்கிழமை அன்றே, விஜயநகர் நிர்மலநந்தநாத சுவாமி கோயிலுக்கு சென்றார்.
- ஞாயிற்றுக்கிழமை திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
- திங்கள்கிழமை ஹோலேநரசிபுரா ஹசன் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மி நரசிம்மா கோயில் மற்றும் சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
- ஸ்ரீரின்கேரியில் உள்ள சாரதாம்பா கோயிலுக்கு செவ்வாய்கிழமை சென்றார். அவர், தேர்தலுக்கு முன்பாக இந்த கோயிலில் தான் ஆதி ருத்ர மகா யாகம் நடத்தினார். அதனால், அவர் முதல்வர் பதவியேற்பதற்கு முன் இந்த கோயிலுக்கு சென்றார்.
- செவ்வாய்கிழமை அன்றே அவர் அவர் தர்மஸ்தலா மஞ்சுநாதசுவாமி கோயிலுக்கும் சென்று தரிசனம் பெற்றார்.
- பின்னர், புதன்கிழமையன்று கர்நாடகாவின் முதல்வராக அவர் பதவியேற்றார். இதை முன்னிட்டு பதவியேற்பதற்கு முன்னதாக மைசூரு சாமுண்டேஸ்வரி கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தார். அவர், இதைத்தொடர்ந்து தனது தாய், தந்தையையும் நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்ற பிறகு தான் பதவியேற்பு விழாவுக்கு சென்றார்.
- பதவியேற்பதற்கு முன்பு கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்த குமாரசாமி பதவியேற்ற பிறகு சுவாமிகளை சந்தித்து வருகிறார்.
- நேற்று வியாழக்கிழமை பட்டநாயகனஹாலி மட்டில் இருக்கும் நன்ஜவாதூடா சுவாமிகளை சந்தித்து பேசினார்.
- இதைத்தொடர்ந்து, இன்று காலை ஸ்ரீ சிவகுமார சுவாமியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமியின் ஆன்மீக சுற்றுலா நீண்டு கொண்டே இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


