குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

பாஜக-வுக்கு கர்நாடகத்தில் நடந்தது டிரைலர் தான் 2019-ல் தான் திரைப்படம் ரிலீஸ்: சந்திரபாபு நாயுடு மகன்

பாஜக-வுக்கு கர்நாடகத்தில் நடந்தது வெறும் டிரைலர் தான், 2019-ல் தான் திரைப்படம் வெளியாகவுள்ளதாக ஆந்திர முதல்வர் மகன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:07 pm

Raghavendran

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடைபெற்ற தர்ம போராட்ட சபையில் அக்கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ஆந்திர அமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது ஆந்திர அமைச்சரும், முதல்வர் சந்திரபாபு நாயுடு மகனுமான நர லோகேஷ் பேசியதாவது:

ஆந்திர மாநிலத்துக்கு உதவும் என்கிற நம்பிக்கையுடன் கடந்த 2014 தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி, பாஜக-வுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இது எதுவும் நடைபெறவில்லை.

ஆந்திர மாநிலத்தில் ஒரு வார்டு தேர்தலில் கூட வெற்றிபெற தகுதியில்லாத பாஜக, எங்களுடன் கூட்டணி அமைத்ததால் தான் எம்எல்ஏ மற்றும் எம்எல்சி பெற்றனர். அவர்களுக்கு இந்த அரிய வாய்ப்பை வழங்கியது தெலுங்கு தேசம் கட்சிதான்.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சக்தியை மீறி இந்திரா காந்தியால் கூட ஆட்சிக்கு வரமுடியவில்லை. பாஜக-வுக்கு கர்நாடகத்தில் நடந்தது வெறும் டிரைலர் தான், 2019-ல் தான் திரைப்படம் வெளியாகவுள்ளது என்றார்.

பின்னர் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மிகவும் பழமையான கட்சியான காங்கிரஸ் காணாமல் போனது போன்ற நிலை விரைவில் பாஜக-வுக்கும் ஏற்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.