விஜயபுரா: சோனியா பிரச்சாரத்தால் தங்களது டெபாசிட்டுகளைக் காப்பாற்றலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைப்பதாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
கர்நாடகாவில் வரும் 12-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தொடர்ச்சியாக தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசி வருகிறார்.
உடல்நலக் குறைபாடால் கடந்த இரு ஆண்டுகளாக பரபரப்பு அரசியலிலிருந்து ஒதுங்கி இருந்த சோனியா காந்தி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிஜய்ப்பூர் பகுதியில் கூட்டம் ஒன்றில் செவ்வாயன்று பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் சோனியா பிரச்சாரத்தால் தங்களது டெபாசிட்டுகளைக் காப்பாற்றலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைப்பதாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயபுரா என்ற பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது:
திங்களன்று பேட்டி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் காங்கிரசில் மகன் (ராகுல் காந்தி) எதுவும் செய்ய இயலவில்லை என்று பேசுவதைப் பார்த்தேன். ஒருவேளை தாயாரை (சோனியா காந்தி) அழைத்து வந்தால் அவர் ஏதாவது செய்வார், அதன் மூலம் டெபாசிட்டுகளைக் காப்பாற்றலாம் என காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள் போல உள்ளது.
தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் மக்களிடையே பிரிவினையை உண்டாக்குகிறது. அத்துடன் காங்கிரஸ் பெண்களின் பாதுகாப்பினைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறது. அதே சமயம் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா கொண்டு வரப்பட்ட பொழுது காங்கிரஸ் ஆதரவு தரவில்லை.
பாரதிய ஜனதா வளர்ச்சியினை முன்வைத்து மக்களிடம் வாக்குகளை சேகரிக்கிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர்களுக்கு தங்களது வாரிசுத் தலைவர்களின் மீதே நம்பிக்கை இல்லை.
லிங்காயத்து சமுதாயத்தைத் தோற்றுவித்தவரான பஸவேஸ்வரா விஜயபுராவைச் சேர்ந்தவர் என்பதை முன்னிறுத்தி பேசிய மோடி, ‘மஹான் பஸவேஸ்வரா அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற கொள்கை உடையவர். ஆனால் காங்கிரஸ் அரசு மக்களை மதம், ஜாதி மற்றும் ஓட்டு எண்ணிக்கையில் பிரிக்கிறது. எனவே அந்த சமுதாயத்தினர் காங்கிரஸை புறக்கணித்து விடுவார்கள். ஜாதி என்னும் விஷத்தினை தங்களுக்குள் அனுமதிக்க மாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


