ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

2017-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு: தெலங்கானாவைச் சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி முதலிடம்!

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 55.60 சதவீத மதிப்பெண்களுடன் தெலங்கானாவைச்

Updated On :6 மே 2018, 4:58 pm

புதுதில்லி: 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 55.60 சதவீத மதிப்பெண்களுடன் தெலங்கானாவைச் சேர்ந்த  அனுதீப் துரிஷெட்டி முதலிடத்தில் பிடித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வு (2017) முடிவுகள் கடந்த மாதம் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டன.  இந்த தேர்வில் 750 ஆண்கள், 240 பெண்கள் என 990 பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

இதில், 55.60 சதவீத மதிபெண்களுடன் தெலங்கானாவைச் சேர்ந்த அனுதீப்  துரிஷெட்டி முதலிடத்தில் பிடித்துள்ளார். 

மொத்தம் 2,025 மதிப்பெண்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் அனுதீப் எழுத்துத் தேர்வில் 950 மதிபெண்களும், நேர்முகத் தேர்வில் 176 மதிப்பெண்கள் என மொத்தம் 1126 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 

இதனை தொடர்ந்து அரியானா மாநிலத்தை சேர்ந்த 4 வயது குழந்தையின் தாய் அனு குமாரி எழுத்துத் தேர்வில் 937 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 187 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 1124 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

மூன்றாவது இடம் பிடித்துள்ள சச்சின் குப்தா எழுத்துத் தேர்வில் 946 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வில் 176 மதிப்பெண்கள் என மொத்தம் 1122 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

2016- ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற நந்தினி கே.ஆர். 1,120 மதிப்பெண்கள் (55.3 சதவீதம்) பெற்றார். 2015-ஆம் ஆண்டு தினா டபி 1,063 மதிப்பெண்கள் (52.49 சதவீதம்) பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.