லாஸ் ஏஞ்சலீஸ்: பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட 8 வயது கதுவா சிறுமியின் வழக்கறிஞர் தீபிகாவை , பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை கிளப்பியது.
இந்த வழக்கின் விசாரணை தற்பொழுது ஜம்மு காஷ்மீர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சக வழக்கறிஞர்கள் மற்றும் பார் கவுன்சில் செயல்பட்ட பொழுதும், தீபிகா சிங் ரஜாவத் எனும் பெண் வழக்கறிஞர் துணிச்சலாக சிறுமி சார்பாக நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் படி உச்ச நீதிமன்றம் கூட உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கதுவா சிறுமியின் வழக்கறிஞர் தீபிகாவை பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன். இவர் சிறுவர்கள் மத்தியில் பிரபலமான ‘ஹாரி பாட்டர்’ தொடர் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் ஐநாவின் சார்பாக பெண்கள் நல்லெணத் தூதராகவும் இருந்து வருகிறார். அதன் சார்பாக இளம்பெண்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் வெள்ளியன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தீபிகா பற்றிய கட்டுரை ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த கட்டுரையானது தீபிகாவின் தன்னம்பிக்கை மற்றும் தொழில் நேர்மை ஆகியவற்றைப் பாராட்டுவதாக அமைந்திருந்தது. கட்டுரையினைப் பகிர்ந்த எம்மா அதில் 'எல்லா சக்தியும் தீபிகாவுடையதே' என்று குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!

தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


