டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பட்டப் பகலில் வங்கி வாசலில் ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்

லூதியானா - பெரோஸ்புர் சாலையில் உள்ள எச்டிஎஃப்சி வங்கிக் கிளையின் வாசலில் தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.18 லட்சத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

News image
file photo
Updated On :30 ஜனவரி 2024, 12:32 pm

ANI


லூதியானா: லூதியானா - பெரோஸ்புர் சாலையில் உள்ள எச்டிஎஃப்சி வங்கிக் கிளையின் வாசலில் தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்து ரூ.18 லட்சத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் கையில் பணப்பையுடன் வந்த போது, திடீரென அங்கே வந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும் ஊழியர்களைத் தாக்கியும், அவர்களிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு தப்பினர்.

இந்த கொள்ளைச் சம்பவம் முழுவதும், வங்கியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து லூதியானா காவல்துறை ஆணையர் கூறுகையில், தனியார் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் பணத்தை வங்கியில் செலுத்த கொண்டு வந்த போது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 கொள்ளையர்கள் ரூ.18 லட்சம் ரொக்கப் பணத்தை பறித்துச் சென்றனர். இந்த கொள்ளை பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

வங்கி வாயிலிலேயே, பட்டப் பகலில் கொள்ளையர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.