திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பிரதமர் மோடியின் பயணத்திட்டத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக இளைஞர் கைது! 

பிரதமர் மோடியின் விரிவான வாரணாசி பயணத்திட்டத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக இளைஞர் ஒருவரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :14 மார்ச் 2018, 10:56 am

வாரணாசி: பிரதமர் மோடியின் விரிவான வாரணாசி பயணத்திட்டத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக இளைஞர் ஒருவரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். 

பிரதமர் மோடி சமீபத்தில் தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்கு சென்றிருந்தார். அப்பொழுது அவர் எந்த சமயத்தில் என்ன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்பது தொடர்பான விரிவான பயணத்திட்டம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியது.

இது தொடர்பாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவினர் உத்தரபிரதேச மாநில அரசிடம் புகார் செய்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அனுப் பாண்டே என்பவரைக் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட அனுப் பாண்டேவின் பெற்றோர்கள் காவல்துறையினரிடம் அனுப் பாண்டே இரண்டு வருடங்களுக்கு முன்னதாக பிரதமர் மோடியின் சமூக ஊடகக் குழுவில் பணியாற்றியதாகவும், ஆனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் வாரணசிக்குத் திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்ப்பட்டுள்ள அனுப் பாண்டே பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரதமர் மோடியால் பின்தொடரப்படும் 1932 பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.