மும்பை: நீரவ் மோடி நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் சார்பாக அளிக்கப்பட்டுள்ள ரூ.1000 கோடி கடனை வசூலிக்க, கண்ணுக்கு எட்டிய வரை வாய்ப்பில்லை என்று அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பி.என்.பி வங்கியிடம் இருந்தும், அவ்வங்கி மூலம் பெறப்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் பல வங்கிகளிடம் இருந்து ரூ. 118000 கோடி அளவில் மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெஹுல் சோக்ஷி இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர்.
இந்நிலையில் மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் தீவிர குற்றங்களுக்கான விசாரணை அலுவலகமானது புதனன்று ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகளின் தலைவர்களையோ அல்லது மூத்த அதிகாரிகளையோ நேரில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.
அங்கு வைர வியாபாரியான நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரும் தொழில் கூட்டாளியுமான மெஹுல் சோக்ஷி ஆகிய இருவருக்கும், எவ்வளவு ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு கோரப்பட்டிருந்தது. அதன்படி ஐசிஐசிஐ வங்கி செயல் இயக்குநர் கண்ணன் மற்றும் ஆக்சிஸ் வங்கியின் துணை மேலாண்மை இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஆகியஇருவரும் அந்த அலுவலகத்தில் ஆஜராகி இருந்தனர்.
அதில் தங்கள் வங்கிக்கு ரூ.800 கோடியினை நீரவ் மோடி தர வேண்டி உள்ளதாக கண்ணனும், ரூ.200 கோடியினை நீரவ் மோடி தர வேண்டி உள்ளதாக ஸ்ரீனிவாசனும் விசாரணை அலுவலகத்தில் தெரிவித்தனர். ஆனால் இருவருமே ரூ.1000 கோடி கடனை வசூலிக்க கண்ணுக்கு எட்டிய வரை வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


