ஜம்மு-காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் பரவியுள்ள பயங்கரவாதிகளை அழிக்கும் விதமாக இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அங்கு நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய ராணுவம் பதிலடி அளித்தது. இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும், அங்கு இந்திய ராணுவத்துக்கு எதிராக நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் 15 வயது சிறுவன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தான். கல்வீச்சில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ராணுவம் நடத்திய பதிலடியில் மேலும் 8 பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூடு மற்றும் கல்வீச்சு சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில், புலவாமா மாவட்டத்தில் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க இணைய வசதியும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


