/

ஒடிசாவில் ஒரு பாசமலர்: தங்கையைக் காப்பாற்ற 25 அடி ஆழ கிணற்றில் குதித்த 9 வயது சிறுமி

ஒடிசா மாநிலத்தில், தனது தங்கையின் உயிரைக் காப்பாற்ற, தன்னுயிரை துச்சமாக நினைத்து 25 அடி ஆழ கிணற்றில் குதித்த 9 வயது சிறுமியின் தீரம் பாராட்டுக்குரியதாக உள்ளது

News image
file photo
Updated On :30 ஜனவரி 2024, 4:04 pm

ENS


ஒடிசா மாநிலத்தில், தனது தங்கையின் உயிரைக் காப்பாற்ற, தன்னுயிரை துச்சமாக நினைத்து 25 அடி ஆழ கிணற்றில் குதித்த 9 வயது சிறுமியின் தீரம் பாராட்டுக்குரியதாக உள்ளது.

சோனேபுர் மாவட்டம் கென்துமுண்டா கிராமத்தில் இருந்த 25 அடி ஆழமுள்ள கிணற்றில் தனது 3 வயது தங்கை தவறி விழுந்துவிட்டார். உடனே சாதுர்யமாக செயல்பட்டு, அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது நண்பர்களிடம் குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டதை பெற்றோரிடம் தெரிவிக்குமாறு கூறிவிட்டு, தங்கையைக் காப்பாற்ற வீரச் சிறுமி சாயாகாந்தி பாக் சிறிதும் தாமதிக்காமல் கிணற்றில் குதித்துள்ளார். சாயா காந்தி 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

Story image

சம்பவம் குறித்து அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து கயிற்றின் உதவியோடு இருவரையும் பத்திரமாக மீட்டனர். தங்கையைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த சிறுமியை கிராம மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தேசிய வீரதீர சிறுவர், சிறுமிகளுக்கான விருதுக்கு சாயாகாந்தியின் பெயரை பரிந்துரைக்குமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சாயாகாந்தியை பாராட்டி கடந்த சனிக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த மாவட்ட ஆட்சியர் தசரதி சதாபதி, நிச்சயம், இச்சிறுமிக்கு வீரதீர விருது கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.