சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

திருமண நிகழ்வில் சாப்பாட்டுத் தட்டுக்காக சண்டை: ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட பரிதாபம் 

பிகார் மாநிலத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் சாப்பாட்டுத் தட்டுக்கு ஏற்பட்ட சண்டையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:03 pm

PTI

பாட்னா: பிகார் மாநிலத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் சாப்பாட்டுத் தட்டுக்கு ஏற்பட்ட சண்டையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

பிகார் மாநிலம் பலாலியா நகரில் உள்ள விக்ரம்புரா பகுதியில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது விருந்தினர்களுக்கு உணவு பரிமாறும்போது சாப்பாட்டுத் தட்டு வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது திருமண வீட்டில் இரு பிரிவினர் சாப்பாட்டுத் தட்டுக்காக மாறி மாறி வாக்குவாதம் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில், திருமண வீடே கலவர பூமியாக மாறியது. இதில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்கையில் விஷால் (20) என்பவர் வழியிலேயே உயிரிழந்தார். மீதமுள்ள 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.