மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கருப்பாக இருப்பதாக கிண்டலடித்த உறவினர்களை உணவில் விஷம் கலந்து கொடுத்துக் கொன்ற பெண்

மகாராஷ்டிரா மாநிலம் ரெய்கத் மாவட்டத்தில், தான் கருப்பாக இருப்பதாகக் கிண்டல் செய்த உறவினர்களை, உணவில் விஷம் வைத்துக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :23 ஜூன் 2018, 9:41 am


ரெய்கார்: மகாராஷ்டிரா மாநிலம் ரெய்கத் மாவட்டத்தில், தான் கருப்பாக இருப்பதாகக் கிண்டல் செய்த உறவினர்களை, உணவில் விஷம் வைத்துக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

உறவினரின், வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக சமைக்கப்பட்ட உணவில் அந்த பெண் விஷம் வைத்ததில், 5 பேர் உயிரிழந்தனர்.

மஹத் கிராமத்தில் உள்ள சுபாஷ் மானேவின் வீட்டு கிரகப்பிரவேசம் ஜூன் 18ம் தேதி நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட உணவில், குற்றவாளி பிரக்யா சர்வாஸி என்ற பெண் விஷம் கலந்துள்ளார்.

இந்த உணவை சாப்பிட்ட 4 சிறுவர்களும், ஒரு வயதான நபரும் உயிரிழந்தனர். சுமார் 80 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ஒரு பெண்ணை கைது செய்து அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குடும்பச் சண்டையில் தான் இந்த செயலை செய்து விட்டதாக அந்த பெண் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 120 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், 5 பேர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.