குவகாத்தி: மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர், திப்ருகர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தியால், மனைவியின் தொண்டையை அறுத்துக் கொலை செய்த குற்றவாளி பூர்ணா நஹர் தேகாவை, அங்கிருந்தவர்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பூர்ணா நஹர் டேகா, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 9 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் பெயிலில் வந்தார்.
இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்துக்கு வந்திருந்த மனைவி ரிடாவை, கணவர் பூர்ணா, தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தொண்டையை அறுத்துள்ளார்.
உடனடியாக ரிடா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
நீதிமன்ற வளாகத்திலேயே, பாலியல் பலாத்காரக் குற்றம்சாட்டப்பட்டவர், தனது மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


