மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரியின் உடல் நல்லடக்கம்

பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரியின் உடல் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:56 pm

IANS


ஸ்ரீநகர்: பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரியின் உடல் பொதுமக்களின் கண்ணீர் அஞ்சலிக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சுஜாத் புகாரியின் உடலுக்கு நூற்றுக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலிக்குப் பிறகு, பாரமுல்லா மாவட்டத்தில் புகாரியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மூத்த பத்திரிகையாளரும், ரைசிங் காஷ்மீர்' பத்திரிகை ஆசிரியருமான சுஜாத் புகாரி (53), மற்றும் அவரது பாதுகாவலர்கள் இருவரும் நேற்று இரவு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

லால்சௌக் பகுதியில் உள்ள பத்திரிகை அலுவலகத்தில் இருந்து வியாழக்கிழமை இப்தார் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுஜாத் புகாரி காரில் புறப்பட்டார். அப்போது புகாரியுடன், அவரது பாதுகாவலர்கள் இருவரும் காரில் இருந்தனர்.

அப்போது, பத்திரிகை அலுவலகத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த மூன்று பயங்கரவாதிகள், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் புகாரி இருந்த காரை நோக்கி சரமாரியாக சுட்டனர். காரைத் துளைத்துக் கொண்டு குண்டுகள் பாய்ந்தன. இதில் புகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த பாதுகாவலர்களில் ஒருவரும் பலியானார். மேலும், ஒரு பாதுகாவலர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கியில் சுட்ட மர்ம நபர்கள், அங்கிருந்து மோட்டார் சைக்களில் தப்பியோடிவிட்டனர். அவர்கள் வெகுநாள்கள் சுஜாத் புகாரி-யின் நடவடிக்கைகளை கண்காணித்து, கொலை சம்பவத்தை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி நிலவ வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பல்வேறு மாநாடுகளை புகாரி ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார். இதற்கு முன்பு, முன்னணி ஆங்கில நாளிதழில், காஷ்மீர் மாநில செய்தியாளராக அவர் பணியாற்றியுள்ளார். சுஜாத் புகாரியின் சகோதரர் அகமது புகாரி, மாநில அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீஸார், முதல் கட்டமாக இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என்று உறுதி செய்துள்ளனர். எனினும், அவர் எதற்காக சுட்டுக் கொல்லப்பட்டார்? அவரை சுட்டுக் கொன்றது எந்த பயங்கரவாத அமைப்பினர் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. 

கண்டனம்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டமைப்பும் இந்த சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.