யமுனா நதியின் கொள்ளளவு அதன் அபாயகரமான 204 மீட்டரைக் கடந்து 204.83 மீட்டராக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் மழைப் பெய்த காரணத்தால் யமுனா நதியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விரைவில் 205.40 மீட்டர் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வரை 1,87,272 கன அடியாக இருந்த யமுனா நதியின் நீர் வரத்து சனிக்கிழமை 1,93,607 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஹரியாணாவில் உள்ள ஹாதினி குந்த் பாரேஜ்ஜில் இருந்து 1,15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
எனவே தாழ்வானப் பகுதிகளுக்கு தில்லி அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறி வேறு இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக கிழக்குப் பகுதியில் 17 படகுகளும், வெள்ள தடுப்பு பிரிவின் கீழ் 34 படகுகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

ரைபகினா, ஆஸ்டபென்கோ முன்னேற்றம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


