பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கேரளா: குடும்பச் சூழ்நிலையால் மீன் விற்கும் கல்லூரி மாணவி

குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையாலும், படிப்பைத் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தாலும், மாலை நேரத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் கல்லூரி மாணவி ஹனன்.

News image
Updated On :26 ஜூலை 2018, 9:41 am


கொச்சி: குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையாலும், படிப்பைத் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தாலும், மாலை நேரத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் கல்லூரி மாணவி ஹனன்.

தம்மனம் சந்திப்புப் பகுதியில் மாலை நேரத்தில் படு ஜோராக மீன் விற்பனையில் ஈடுபடும் ஹனன் பற்றி தெரிய வந்த தகவல் என்னவென்றால், அல்  அஸார் கலைக் கல்லூரியில் வேதியியயல் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார் ஹனன். 

அதிகாலையிலேயே எழுந்து மீன் சந்தைக்குச் சென்று மீன்களை வாங்கிக் கொண்டு தம்மனம் சந்திப்புப் பகுதிக்குச் சென்று விடுகிறார். அங்கு ஒரு வீட்டில் மீன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு கல்லூரிக்குச் செல்கிறார்.

கல்லூரி முடிந்து சுமார் இரண்டரை மணி நேரம் பயணித்து தமன்னம் வந்து, இரவு 9 மணி வரை மீன் விற்பனையில் ஈடுபடுகிறார். பிறகு வீட்டுக்குச் செல்கிறார். இதுதான் ஹனன்-த்தின் அன்றாட வாழ்க்கை.

குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையால், தாய் மற்றும் சகோதரனுக்கு உதவுவதற்காகவே மீன் விற்பனையில் ஈடுபடுகிறேன். டியூஷன் எடுப்பது, நகைகள் செய்வது என பல வேலைகளை செய்துள்ள ஹனன், மலையாளத்தில் கவிதைகளையும் எழுதுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.