பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களை குறிப்பிட்டு, பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என ஹைதரபாத் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாரில் பசு கடத்தப்பட்டதாக கூறி பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து மாநில அரசை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்த தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஹைதராபாத் கோஷமால் தொகுதியின் பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா சிங் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். புதிய மசோதாக்களை அறிவிக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கும் விதத்தில் ஒரு விடியோவை அவர் வெளியிட்டார். அந்த விடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
"இதுபோன்ற வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்றால், பசுவை தேசிய விலங்காக அறிவித்து கௌரவப்படுத்த வேண்டும். அதனை பாதுகாக்க கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும், மேலும் அதற்கென தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மேற்பார்வை மேற்கொள்ள வேண்டும். அதுவரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரும்.
அவர் (ராஜஸ்தானில் கொலை செய்யப்பட்டவர்) ஏன் கொலை செய்யப்பட்டார் என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஊடகங்களில் வெளியான தகவலின்படி பசு கடத்தல் குற்றத்துக்கு அவர் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பசுக்கள் கொல்லப்படும்போது யாரும் போராட்டம் நடத்தவில்லை.
எனினும், பசு பாதுகாவலர்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் போது, ஊடகங்கள் பசு பாதுகாவலர்கள் மீது பழி கூறுகின்றனர்" என்றார். இந்த விடியோ சமூகவலைதளங்களில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வைரலானது.
இந்நிலையில், "அந்த விடியோவில் நான் தவறாக எதும் கூறவில்லை. பசு கொலைகள் ஓயும் வரை இதுபோன்ற தாக்குதல்கள் ஓயாது" என்று அவர் தனது கருத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கன்னியாகுமரி: வாக்குப் பதிவு குறைந்தது ஏன்?

கேரள பட்டாசு வெடி விபத்து: மேலும் சில உடல் பாகங்கள் கண்டெடுப்பு

வாக்காளா்களுக்கு இடையூறு செய்ததாக 2 இளைஞா்கள் கைது

வெள்ளையந்தோப்பு கோயிலில் சித்திரைத் திருவிழா
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


