திருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து 36 மணி நேரமாக பெய்து வரும் கன மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை தொடங்கிய கன மழை வரும் புதன்கிழமை வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவனந்தபுரம் செல்லும் மங்களூர் விரைவு ரயில் பெட்டி மீது மரம் ஒன்று வேறோடு சாய்ந்ததில் ரயில் பெட்டிகள் சேதமடைந்தன. எனினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 3 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 36 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
8 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் விடுமுறை அறிவித்துவிட்டன. இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஆலப்புழா, இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கொல்லம், கொச்சி மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
மழை மற்றும் வெள்ளம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


