பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் 'ஹிந்து பாகிஸ்தான்' உருவாகும் என்று கூறிய சசி தரூரை ஒட்டுமொத்த இந்தியாவும் கண்டிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி, சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் இந்தியா, ஹிந்து பாகிஸ்தானாக மாற்றப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இக்கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. சசி தரூரின் இந்த கருத்து தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுமீத் சௌத்ரி என்பவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக சசி தரூர் மீது வழக்கு தொடர்ந்தார். அதில், நாட்டின் இறையாண்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹிந்துகளை அவமதிக்கும் விதமாகவும் சசி தரூரின் கருத்து அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து இந்திய அரசியலமைப்பு சட்டம் 153ஏ மற்றும் 295ஏ ஆகிய பிரிவுகள் மற்றும் தேசிய அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971-ன் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வருகிற ஆகஸ்டு 14-ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு கொல்கத்தா உயர் நீதிமன்றம், சசி தரூருக்கு சனிக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:
சசி தரூர்-இன் இந்த கருத்தை மக்களின் நீதிமன்றம் தான் கண்டிக்க வேண்டும். ஹிந்து மற்றும் பாகிஸ்தானை இணைத்து கூறியதன் மூலம் நமது அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் சசி தரூர் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார்.
இந்த கருத்துக்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க தவறினாலோ அல்லது அவரை கட்சியில் இருந்து நீக்கத் தவறினாலோ, மக்களாகிய நாம் தான் அதற்காக குரல் எழுப்ப வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவும் தங்களின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். நாடாளுமன்றப் பதவியை ராஜிநாமா செய்யுமாறு வலியுறுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


