பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அவருடைய நண்பர் மோடியின் கருத்து என்ன என்று காங்கிரஸ் ட்விட்டரில் சனிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவும், இருநாடுகளின் உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் சென்றிருந்தார். மேலும் ஷெரீஃப்-இன் பேத்தி திருமண நிச்சயத்திலும் கலந்துகொண்டார். இதுவே மோடியின் முதல் பாகிஸ்தான் பயணமாகும்.
இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டி சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனர். இதுகுறித்து நவாஸ் ஷெரீஃப்-இன் நண்பர், பிரதமர் மோடியின் கருத்து என்ன என்று காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


