சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!
/

வேலையில்லாத வெட்டி என கிண்டல் அடித்த உறவினர்கள் 3 பேர் கத்தியால் குத்தி கொலை

வேலையில்லாத வெட்டி என அடிக்கடி கூறி கிண்டல் அடித்ததால் உறவினர்கள் 3 பேரை இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்த பயங்கர

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:06 pm

PTI


நாசிக்: வேலையில்லாத வெட்டி என அடிக்கடி கூறி கிண்டல் அடித்ததால் உறவினர்கள் 3 பேரை இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்த பயங்கர சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அரங்கேறி உள்ளது. 

இன்றைய இளைஞர்களுக்கு பெரும் கவலையாக இருப்பது வேலை கிடைப்பது. படித்துவிட்டு அதற்குரிய வேலை இல்லையே என்றும் அன்றாட செலவுக்குக் கூட வேலை இல்லையே என பரிதவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருகி வரும்நிலையில், அவர்களை சீக்கிரம் வேலைக்கு போ என குடும்பத்தில் உள்ளவர்கள் கண்டித்தும் வருகின்றனர். 

இந்நிலையில், நாசிக் மாவட்டம், இகாத்புரி பகுதியில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வரும் மால்வாடி கிராமத்தை சேர்ந்த சச்சின் கணபதி சிமேட்(21). பிளஸ் டூ முடித்த இவருக்கு இன்னும் வேலைகிடைக்காததால், ஊரைச் சுற்றிவந்துள்ளார்.

சச்சின் வீட்டுக்கு அருகே, அவரது உறவினர் ஹிராபாய் சங்கர் சிமேட்(55) சச்சினை வேலையில்லாத வெட்டி என அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சச்சின் குடும்பத்துக்கும், அவரது உறவினர் குடும்பத்துக்கும் நிலத்தகராறும் இருந்துள்ளது. இதனால், சச்சின் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று சனிக்கிழமை காலை வழக்கம் போல் சச்சின் வெளியே புறப்டும் போது, அவரது உறவினர் குடும்பத்தினர் கிண்டல் செய்துள்ளனர். இதனால், மிகுந்த ஆத்திரமடைந்த சச்சின், தனது உறவினர் என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்துவந்து,  ஹிராபாய் சங்கர், அவரது மனைவி மங்கள் கணேஷ் சிமேட்(30) அவரின் மகன் ரோகித் (4) ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். 

இந்தச் சத்தம் கேட்டு வெளியே விளையாடிக்கொண்டிருந்த மங்கள் கணேஷின் மூத்த மகன் யாஷையும்(6) கத்தியால் குத்த சச்சின் முயன்றுள்ளார். ஆனால், அந்த சிறுவன் கழுத்தில் சிறிய காயத்துடன் தப்பி வெளியே ஓடிவந்துவிட்டார்.

இதைப் பார்த்த பொதுமக்கள், வீட்டுக்குள் சென்று சச்சினை சுற்றிவளைத்துப் பிடித்து, போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சச்சினை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

சச்சின் கத்திக்குத்தில் காயமடைந்த சிறுவன் யாஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

கொலை செய்த சச்சின் மீது ஐபிசி 302, 307, 326 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.