புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

லாலுவுக்கு தண்டனை வழங்கிய சிபிஐ நீதிபதி துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பம்! 

ஊழல் வழக்கு ஒன்றில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை வழங்கிய சிபிஐ நீதிபதி ஒருவர், தனது குடும்பத்துடன் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள.. 

News image
Updated On :19 ஜனவரி 2018, 10:41 am

ராஞ்சி: ஊழல் வழக்கு ஒன்றில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவுக்கு சிறை தண்டனை வழங்கிய சிபிஐ நீதிபதி ஒருவர், தனது குடும்பத்துடன் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. 

அரசு கருவூலத்தில் இருந்து பண மோசடி செய்ததாக, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் , பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் கடந்த 6-ஆம் தேதியன்று லாலுவுக்கு ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் மூன்றரை ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் சிபிஐ நீதிபதி ஷிவ்பால் சிங், தனது குடும்பத்துடன் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. அவர், அவரது மகன் மற்றும் மகள் ஆகிய மூவரும் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

அவர்கள் மூவரது விண்ணப்பங்களும் பரிசீலனையில் உள்ளதாக ராஞ்சி காவல்துறை தெரிவித்துள்ளது. லாலுவுக்கு தீர்ப்பு வழங்கியதன் எதிர் வினைகள்  எதுவும் இருக்கலாம் என்று எண்ணியே, நீதிபதி குடும்பத்தினர் துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.