/

இந்திய ராணுவ சீருடையில் நுழைந்த பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொலை: பயங்கர சதி முறியடிப்பு

இந்திய ராணுவ சீருடையில் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

News image
Updated On :31 டிசம்பர் 2018, 9:00 am


பாரமுல்லா: இந்திய ராணுவ சீருடையில் இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதன் மூலம் பாகிஸ்தான் எல்லை பயங்கரவாத செயல் குழுவின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர்களை கண்காணித்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர். நேற்று இரவு முழுவதும் இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. 

இதன் மூலம் அவர்கள் இந்திய எல்லைக்குள் ராணுவத்துக்கு எதிராக மிக பயங்கர தாக்குதல் நடத்தும் எண்ணத்தோடு வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.