சொராபுதீன் ஷேக் - துளசிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், 21 காவலர்கள் உட்பட 22 பேரை விடுதலை செய்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநில உள்துறை அமைச்சராக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா முன்பு பதவி வகித்தபோது, அவர் மீதும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. இருப்பினும், குற்றச்சாட்டில் இருந்து அவர் கடந்த 2014ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு மீதான விசாரணை, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த மாதம் இறுதி வாதங்கள் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே. ஷர்மா, தனது தீர்ப்பை டிசம்பர் 21ஆம் தேதி வெளியிடுவேன் என்று அறிவித்தார். அதன்படி, இந்த வழக்கில் தனது தீர்ப்பை நீதிபதி ஷர்மா இன்று வெளியிட்டார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் அருகே கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் போலீஸாருடனான துப்பாக்கிச் சண்டையில் சொராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி 3 நாள்கள் கழித்து போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சொராபுதீன் நண்பரான துளசிராம் பிரஜாபதி 2006ஆம் ஆண்டு போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர்கள் மூவரும் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பின்னர் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, இந்த துப்பாக்கிச் சண்டை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தி, அமித் ஷா உள்ளிட்ட 38 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் அமித் ஷா உள்ளிட்ட 16 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை எனத் தெரிவித்து, அவர்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து விட்டது. எஞ்சியுள்ள 22 பேருக்கு எதிராக வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களும், சாட்சிகளும், குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இல்லை என்று கூறி நீதிபதி எஸ்.ஜே. ஷர்மா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை செய்யப்பட்ட 22 பேரில் 21 பேர் ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில இளநிலை காவல்துறை அதிகாரிகள் ஆவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கருப்பு இசை வெளியீட்டு விழா!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!

ஆட்டத்தின் போக்கை மாற்றிய 4 சிக்ஸர்கள்... ரிங்கு சிங்குக்கு இர்பான் பதான் பாராட்டு!
கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு


