திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு கேவியட் மனு தாக்கல் 

மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

News image
Updated On :3 டிசம்பர் 2018, 10:10 am

புது தில்லி: மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் 30 சதவீத மக்கள் தொகை கொண்ட மராத்தா சமூகத்தினர், நீண்ட நாட்களாக இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வன்முறையாக மாறியது.   

இதற்கிடையே, மாநில பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையம் சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மராத்தா சமூகத்தினரின் நிலை குறித்து ஆய்வு நடத்தியது. அதன்பிறகு, சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவில் மராத்தா சமூகத்தினரை அறிவிக்க வேண்டும் என்று அந்த ஆணையம் பரிந்துரைத்தது. 

இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிர அரசு 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மசோதா கடந்த 29-ஆம் தேதி ஒருமனதாக நிறைவேறியது. இந்த மசோதா ஒருமனதாக நிறைவேறியதற்கு முதல்வர் ஃபட்னாவிஸ் எதிர்க்கட்சியினருக்கு நன்றி தெரிவித்தார்.   

இந்நிலையில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு திங்களன்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

அதன்படி 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய விவகாரத்தில் யாராவது எதிர்த்து மனு தாக்கல் செய்தால் மகாராஷ்டிரா அரசின் கருத்தைக் கேட்காமல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.