பன்னிரெண்டு வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் ‘குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா-2018’-க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 12 வயது சிறுமியும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தில் பெண் ஒருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி குற்றவியல் சட்ட (திருத்தம்) அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்துக்கு மாற்றாக, தற்போது இந்த ‘குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா-2018’ கொண்டுவரப்படுகிறது.
இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலமாக மக்களவையில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நிறைவேறியது. மசோதாவுக்கு, அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்தன.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த இந்த ‘குற்றவியல் சட்ட (திருத்த) மசோதா-2018’-இன் படி,
- 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும். குறைந்தபட்சமாக 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம். மேலும் அது ஆயுள் சிறையாகவும் நீட்டிக்கப்படலாம்.
- 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பலாத்கார வழக்கில், குறைந்தபட்ச தண்டனையானது 10 ஆண்டு சிறையிலிருந்து, 20 ஆண்டு சிறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதை ஆயுள் சிறையாக நீட்டிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
- மேலும், இந்த மசோதாவின் மூலமாக பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸார் மற்றும் நீதிமன்ற விசாரணைகளை விரைவுபடுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- அனைத்து வகையான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணை கட்டாயமாக 2 மாதங்களுக்குள்ளாக முடிக்கப்பட வேண்டும்.
- அதேபோல், மேல்முறையீடுகள் மீதான விசாரணை 6 மாதங்களுக்குள்ளாக நிறைவு செய்யப்பட வேண்டும்.
- 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கூட்டு வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமீன் வழங்கப்படாது.
- அத்தகைய, வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் ஜாமீன் மனுக்கள் மீது உத்தரவிடும் முன்பாக, அதன் மீது பதிலளிக்க அரசுத் தரப்பு வழக்குரைஞர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பிரதிநிதிக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வன விலங்குகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை: வனத் துறை எச்சரிக்கை

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


