பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பிரதமர் மோடிக்கு முஸ்லிம்களைப் பிடிக்காது: சசி தரூர்

பிரதமர் நரேந்திர மோடிக்கு முஸ்லிம்களைப் பிடிக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2018, 12:39 pm

பிரதமர் நரேந்திர மோடிக்கு முஸ்லிம்களைப் பிடிக்காது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி பல இடங்களுக்குச் சென்றுள்ளார். அங்கு பலதரப்பட்ட உடைகளையும், தொப்பிகளையும் அணிந்துள்ளார். ஆனால் அவர் இதுவரை முஸ்லிம்களின் உடைகளை அல்லது தொப்பிகளை அணிந்தது கிடையாது. ஏனென்றால் அவருக்கு முஸ்லிம்களைப் பிடிக்காது. அவர்களிடம் வேறுபாடு காட்டுபவர்.

அவர் தன்னை அனைவருக்குமானவர் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கி வருகிறார். அதுபோல பிரதமர் என்பவர் இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவாக தான் இருக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியால் அவ்வாறு செயல்பட முடியாது. அவர் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக மட்டும் தான் செயல்படுகிறார். இதில் அவரது நிலைப்பாடு குறித்து எதைக் கூறமுடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இவை அனைத்தும் நான் வேண்டுமென்றே சர்ச்சைகளை ஏற்படுத்த கூறிய கருத்துக்கள் கிடையாது. இவையெல்லாம் இதுநாள் வரை நான் கவனித்து வந்தது. இவைகளுக்கான பதிலுக்காக நான் காத்திருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.