பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பிரதமர் நரேந்திர மோடியுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் நரேந்தி மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2018, 6:53 am

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பிரதமர் நரேந்தி மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது மாநில வளர்ச்சி தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை சமர்பித்துள்ளார். அதில், ஒன்றிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர், தெலங்கானாவில் அதிகளவிலான பிற்படுத்தப்பட்டோர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக மாநில திட்டம் குறித்து ஆலோசித்தார். மேலும் அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

மேலும் தெலங்கானா மாநிலத்துக்கான புதிய ரயில் சேவைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் தெலங்கானாவில் ஐஐஎம் மற்றும் ஐஐஐடி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தித் தர வேண்டி பிரதமரிடம் பேசியுள்ளார். மாவட்டங்களுக்கான ஜவஹர் நவோதயா வித்யாலையா, புதிய சட்டப் பேரவை வளாகம், கோதாவரி ஆற்றின் காலேஷ்வரம் திட்டத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி உள்ளிட்டவை தொடர்பாகவும் தெலங்கானா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.