தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தாமரைக்கு அல்ல.. நோட்டாவுக்கே வாக்கு : சந்தேகமே வேண்டாம் போஸ்டர் ஒட்டியது பாஜகவினர்தான்

'தாமரைக்கு வாக்களிக்காதீர்கள், நோட்டாவுக்கு வாக்களிப்பீர்' என்று மைசூரு மற்றும் சாமராஜ்நகர் மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதைப் பார்த்ததும் ஏதோ சமூக ஆர்வலர்கள் செய்திருப்பார்களோ என்று சந்தேக

News image
Updated On :27 ஏப்ரல் 2018, 12:10 pm

மைசூரு: 'தாமரைக்கு வாக்களிக்காதீர்கள், நோட்டாவுக்கு வாக்களிப்பீர்' என்று மைசூரு மற்றும் சாமராஜ்நகர் மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதைப் பார்த்ததும் ஏதோ சமூக ஆர்வலர்கள் செய்திருப்பார்களோ என்று சந்தேகம் கூட எழலாம்.

ஆனால், சந்தேகமே இல்லை.. கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பாவின் மகன் பி.ஒய். விஜயேந்திராவுக்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத பாஜகவுக்கு பாடம் புகட்டவே, அவரது ஆதரவாளர்கள் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டரோடு நின்றுவிடாமல், நோட்டாவுக்கு வாக்களிப்போம் என்ற வாசகத்தை சமூக வலைத்தளங்களிலும் பாஜகவினர் வேகமாகப் பரப்பி வருகின்றனர். இது பாஜக தலைமைக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகன் யதிந்திராவை எதிர்த்து வருணா தொகுதியில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா போட்டியிட வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த தொகுதியில் விஜயேந்திராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனால் கடும் அதிருப்திக்குள்ளான பாஜகவினரை சமாளித்து விடலாம் என்றே முதலில் கட்சித் தலைமை நினைத்திருந்தது. ஆனால், வருணா தொகுதியில் பாஜக தொண்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், பாஜக தலைமைக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம் பிடித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.