புது தில்லி: லண்டனில் நடைபெற்ற மலேரியா உச்சி மாநாட்டில், மலேரியாவால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் இந்தியா பங்கேற்கவில்லை.
உலக நாடுகளில் மலேரியாவால் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் காங்கோ, நைஜீரியாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
7 இந்தியர்களில் ஒருவருக்கு மலேரியா தொற்று ஏற்படும் அபாயம் இருக்கும் சூழ்நிலையில், லண்டனில் நடைபெற்ற மலேரியா உச்சி மாநாட்டில் இந்தியா சார்பில் எந்த ஒரு பிரதிநிதியும் பங்கேற்காதது, அதன் பொறுப்புணர்ச்சியை அதிகமாக வெளிப்படுத்துவதாகவே பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில், உலகத் தலைவர்கள் பலரும் பங்கேற்பார்கள் என்றும், மலேரியாவால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளான இந்தியா போன்றவை பங்கேற்று, அதனை ஒழிப்பதற்கான திட்டங்களை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மலேரியாவை ஒழிப்போம் என்ற அமைப்பின் செயல் இயக்குநர் ஜேம்ஸ் வெய்டிங் கூறுகையில், ஆண்டு தோறும் மலேரியாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து வரும் நிலையில், அதற்கு எதிரான நடவடிக்கைகளும், நிதி ஒதுக்கீடும் அதிகரிக்க வேண்டும் என்றார்.
அதே போல, 2016ம் நாடு முழுவதும் மலேரியா பாதிப்பு கடுமையாக உயர்ந்தது. இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இது ஒரு சமிக்ஞை. இந்த நிலையில் லண்டனில் நடத்தப்பட்ட உச்சி மாநாட்டில் மலேரியாவுக்கு எதிரான அனைத்து விஷயங்களும் அலசி ஆராயப்பட்டுள்ளது. இதில் இந்தியா பங்கேற்காதது பெருத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்

தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆம் ஆத்மி: ராகவ் சத்தா
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

