ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கதுவா சிறுமியின் புகைப்படம் வெளியீடு: ஊடகங்களை எச்சரித்து அறிவுரை கூறிய தில்லி உயர் நீதிமன்றம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரத்துக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 7:08 am

புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரத்துக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கதுவா சம்பவம் தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கதுவா சம்பவத்தில் தொடர்புடைய சிறுமியின் பெயரையும், புகைப்படத்தையும் வெளியிட்ட ஊடகங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், அடையாளத்தை வெளிப்படுத்திய ஊடகங்கள் மன்னிப்புக் கேட்கும்படி உத்தரவிட்டனர்.

அதோடு, சிறுமியின் அடையாளத்தை வெளிப்படுத்திய ஊடகங்கள் ஒவ்வொன்றும் தலா ரூ.10 லட்சத்தை ஜம்மு காஷ்மீர் நிவாரண நிதியில் சேர்ப்பிக்குமாறு அபராதமும் விதித்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற சட்டம் தெரிந்தும், தங்களது அறியாமையால் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டதாக ஊடகங்கள் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரின. 

பின்னர், பாலியல் பலாத்கார சம்பவங்களில் பாதிக்கப்படுவோரின் அடையாளத்தை வெளிப்படுத்துவது அரசியலமைப்புச் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதையும், மீறினால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறித்து ஊடகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்  என்றும் நீதிபதி அறிவுரை அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல், பொருள் உணர்த்தும் பெயரால் குறிப்பிடலாம் என்றும் ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.