நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பெண்கள் ஜீன்ஸ், மொபைல் பயன்படுத்த ஹரியாணா கிராமம் தடை!

ஹரியாணாவில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் ஜீன்ஸ் மற்றும் மொபைல் ஃபோன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:47 pm

Raghavendran

ஹரியாணாவில் உள்ள சோனியாபட் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள இசைபூர்  கேதி என்னும் கிராம பஞ்சாயத்தில் பெண்கள் ஜீன்ஸ் மற்றும் மொபைல் ஃபோன்களை பயன்படுத்த கடந்த ஒர் ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்பட்ட பெண்கள் மீதான பலதரப்பட்ட குற்றச்சம்பவங்களை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கிராம பஞ்சாயத்து தரப்பில் இதற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இசைபூர் கேதி கிராம பஞ்சாயத்து தலைவர் பிரேம் சிங் கூறியதாவது:

எங்கள் கிரமாத்தில் பெண் குழந்தைகள் ஜீன்ஸ் அணியவும், மொபைல் ஃபோன்களை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளோம். இதனால் அவர்கள் கெட்டுப்போய்விடுவார்கள் என்று கூறவில்லை. இருப்பினும் கடந்த காலங்களில் நடந்த பெண்கள் மீதான பல்வேறு குற்றச்சம்பவங்கள் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளோம். இந்த நடவடிக்கை அடுத்து தற்போது அதுபோன்ற குற்றச்செயல்கள் குறைந்து நல்ல சூழ்நிலை நிலவுகிறது என்றார்.

இந்நிலையில், இந்த தடை மிகவும் விநோதமாக உள்ளதாக அந்த கிராமத்து பெண்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் பெண்கள் மீதான குற்றச்செயல்களுக்கு ஆண்களின் மனப்போக்கு தான் முக்கிய காரணம். எங்கள் உடையில் எதுவும் இல்லை. இது மிக தவறான முடிவாகும். நாங்கள் உடுத்தும் உடையில் இருந்து எங்களை ஒழுக்கத்தை எடைபோடுவது மிகவும் தவறானது. இதை வைத்து எங்களை தீர்மானிக்க ஆண்கள் யார் என்றும் கேள்வி எழுப்பினார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.