புதுதில்லி: விமானத்தில் கொசுத்தொல்லை இருப்பதாக புகார் கூறிய மருத்துவரை விமான நிறுவனம் கீழே இறக்கி விட்ட சம்பவத்தில், விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
திங்களன்று லக்னௌவிலிருந்து தில்லி நோக்கி புறப்பட இண்டிகோ விமான நிறுவன விமானம் ஒன்று விமான நிலையத்தில் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் உள்ளே சென்று அமர்ந்த பிறகு, அங்கு கொசுதொல்லைஅதிகமாக இருந்தது. பயணிகள் தங்கள் கையில் உள்ள அட்டை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு கொசுக்களை விரட்டியபடி இருந்தனர்.
இந்நிலையில் பயணிகளில் ஒருவரான மருத்துவர் சவுரப் ராய் என்பவர் இது தொடர்பாக விமான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அவர் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்நிலையில் புகார் கூறிய மருத்துவரை விமான நிறுவனம் கீழே இறக்கி விட்ட சம்பவத்தில், விசாரணை நடத்த மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சரான சுரேஷ் பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "லக்னௌ விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்திலிருந்து பயணியான மருத்துவர் சவுரப் ராய் இறக்கி விடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்குஉத்தரவிட்டுளேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள இண்டிகோ விமான நிறுவனம், "குறிப்பிட்ட அந்த பயணி விமான ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்டார். இத்தகைய ஒழுங்கீனங்களை சகித்துக் கொள்ள இயலாது" என்று தெரிவித்துள்ளது.
விடியோ:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்

தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆம் ஆத்மி: ராகவ் சத்தா
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


