லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் பாஜக.,எம்.எல்.ஏ ஒருவர் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் மர்ம மரணம் அடைந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏவாக இருப்பவர் குல்தீப் சிங் செங்கர். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக, இளம்பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
ஆனால் தனது புகாரின் மீது காவல்துறை நடடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த பெண் ஞாயிறன்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தின் முன் தீக்குளிக்க முயற்சி செய்தார். பின்னர் போலீசார் அந்தப் பெண்ணை மீட்டனர்.
அத்துடன் அன்று மாலையே அந்தப் பெண்ணின் தந்தை சுரேந்திர சிங் என்பவர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எம்.எல்.ஏ குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள் நால்வர் போலீசாருடன் இணைந்து, சுரேந்திர சிங்கை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்த பொழுதும் ஞாயிறு நள்ளிரவு வரை அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை. பின்னர் ஒரு வழியாக அவர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் கடுமையான வயிற்று வலியுடனும், வாந்தி மயக்கத்துடனும் அழைத்து வரப்பட்டதாக அங்கிருந்த மருத்துவர் தெரிவித்தார்.
இந்நிலையில் திங்கள் அன்று காலை சுரேந்திர சிங் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த மரணம் தொடர்பாக காவல் நிலைய அலுவலர் மகி உட்பட நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புஷ்பாஞ்சாலி தேவி தெரிவித்துள்ளார்.
அத்துடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில், மாவட்ட துணை நீதிபதி மனிஷ் பன்சால் இந்த மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவார் என்று காவல்துறை ஐ,ஜி பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்

தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆம் ஆத்மி: ராகவ் சத்தா
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


