புது தில்லி: பி.ஆர். அம்பேத்கரை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளை சாடும் வகையில், எங்களைப் போல அம்பேத்கரை கௌரவித்தவர்கள் வேறு யாரும் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார்.
அலிப்புர் சாலையில், அம்பேத்கர் வாழ்ந்து உயிர் நீத்த அந்த இல்லம், அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 13ம் தேதியன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோடி, பல்வேறு கட்சிகள், அரசியல் ஆதாயத்துக்காக அம்பேத்கரின் பெயரை எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால், அவரது கனவுகளை நனவாக்கியது பாஜக அரசுதான். அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அம்பேத்கர் சர்வதேச மையம் என்ற திட்டம் துவங்கப்பட்டது. ஆனால், அடுத்து வந்த காங்கிரஸ் அதனை காலில் போட்டு நசுக்கியது. மீண்டும் பாஜக ஆட்சி வந்ததும், அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்று கூறினார்.
அம்பேத்கரின் முக்கியக் கொள்கைகளில் சமாதானம், ஒற்றுமை ஆகியவையே பிரதானம். அதே கொள்கைகளுடன் எளிய மக்களின் நலனுக்காகவே பாஜக அரசும் செயல்பட்டு வருகிறது என்றும் மோடி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

ஆட்டோ ஓட்டுநா் மா்ம மரணம்

கூத்தாண்டவா் கோயிலுக்கு இதுவரை அளித்த தங்க நகைகளுக்கான கணக்கு விவரம் இல்லை! திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


