திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பான சீராய்வு மனு: செவ்வாய் மதியம் விசாரணை! 

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு மீதான   சீராய்வு மனு விசாரணை, செவ்வாய் மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி... 

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 7:14 am

புதுதில்லி: எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு மீதான   சீராய்வு மனு விசாரணை, செவ்வாய் மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் பயன்பாடு தொடர்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் உடனடியாக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யவும், கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து கடந்த மாதம் 20-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது 1989-ஆம் ஆண்டைய எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என்று மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் வலியுறுத்தின. எனவே  இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் திங்களன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு மீதான   சீராய்வு மனு விசாரணை, செவ்வாய் மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் செவ்வாய் காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோயல் மற்றும் பாலி நாரிமன் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு பற்றி முறையிட்டார். அதற்கு நீதிபதி கோயல், இந்த வழக்கு குறித்து முதலில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி லலித் மற்றும் தான் அடங்கிய அமர்வு ஒன்றினை விசாரிக்குமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டால், செவ்வாய் மதியம் விசாரிப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சீராய்வு மனுவினை நீதிபதிகள் லலித் மற்றும் கோயல் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அறிவித்தார். அத்துடன் விசாரணை மதியம் 2 மணிக்கு பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.