பெங்களூரு: நடன வகுப்புக்கு சரியாக வருவதில்லை என்று நடன ஆசிரியர் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு எலஹங்கா வட்டாரத்தில் அமைந்துள்ளது அட்டூர் லே அவுட் பகுதி. இங்கு வசிக்கும் குமார் மற்றும் ஜோதி தம்பதியினரின் மகள் சந்தனா (12). அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. அத்துடன் அங்குள்ள பத்ரிநாத் நடனப் பள்ளியில் தனியாக நடனம் பயின்று வருகிறார். இங்கு சதீஷ் (28) என்பவர் நடன ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார். சந்தனா சில நாட்களாக நடன வகுப்புக்கு சரியாக வருவதில்லையென்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சதீஷ் அவளைத் தொடர்ந்து மாணவர்கள் முன்னிலையில் திட்டி வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மாலை சந்தனா வழக்கம் போல நடன வகுப்புக்கு வந்த பொழுதும், சதீஷ் அவளைத் திட்டியிருக்கிறார். இதன் காரணமாக மனமுடைந்த சந்தனா தான் கையில் கொண்டு வந்திருந்த பள்ளிப் பையில் இருந்த விஷத்தை எடுத்து சாப்பிட்டு மயங்கி விழுந்திருக்கிறார்
இதனைக் கவனித்த சக மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் சந்தனா உடனடியாகி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் அங்கு இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
சந்தனாவின் உறவுகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட சதீஷை உள்ளூர் பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
நியூஸிலாந்து ஒருநாள் தொடர்: சாம்பியன் ஆனது வங்கதேசம்!

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

