எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஜம்மு-காஷ்மீர் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் பயங்கரவாதிகள் குண்டுவீசி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகளில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:55 pm

Raghavendran

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மெஹபூபா முஃப்தி தலைமையிலான பி.டி.பி கட்சி ஆட்சி செய்து வருகிறது. மெஹபூபா முஃப்தி அம்மாநில முதல்வராக உள்ளார்.

இந்நிலையில், ட்ரால் தொகுதியைச் சேர்ந்த ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் முஷ்டாக் அஹமது வீட்டின் மீது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கையெறி குண்டுகளை வெள்ளிக்கிழமை வீசினர்.

Story image

இதுபோன்று ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரது வீட்டின் மீது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதுபோன்று கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவது இது 2-ஆவது முறையாகும்.

முன்னதாக, சோஃபியான் தொகுதியின் ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் அய்ஜாஸ் மிர் வீட்டின் மீதும் இதேபோன்ற தாக்குதல் சம்பவம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

Story image

ஆளும்கட்சி உறுப்பினர்களின் வீட்டின் மீதே இதுபோன்று அடுத்தடுத்த தினத்தில் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக இதுபோன்று அத்துமீறி நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களால் பொதுமக்கள் உயிரிழக்கும் அவலநிலையும் அங்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.