தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என்று ஆணை பிறப்பிக்கவில்லை: ரிசர்வ் வங்கி புதிய விளக்கம் 

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று ஆணை எதுவும் தாங்கள் பிறப்பிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 6:25 am

புதுதில்லி: வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று ஆணை எதுவும் தாங்கள் பிறப்பிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

மத்திய அரசு வழங்கும் பல்வேறு உதவித் திட்டங்களின் கீழ் நிதி உதவிகளைப் பெற ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான திட்டங்களுக்கான நிதியானது வங்கிகள் மூலமாக வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குடன், தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்ககளுக்கு நினைவூட்டும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளை தொடர்ச்சியாக அனுப்பி வருகின்றன. அத்துடன் டிசம்பர் 31-க்குள் அவ்வாறு இணைக்காவிட்டால், வங்கிக் கணக்குங்கள் செயலிழக்கச் செய்யபப்டும் என்றும் எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன.

இது தொடர்பாக விளக்கம் கேட்டு தில்லியை அடிப்படையாக கொண்டு செயல்படும் 'மணிலைஃப்.இன்' எனும் செய்தி இணையதளத்தின் சார்பாக யோகேஷ் சப்கலே என்பவர் ரிசர்வ் வங்கியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.அதற்கு ஆர்பிஐ அனுப்பியுள்ள பதிலில்தான், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று ஆணை எதுவும் தாங்கள் பிறப்பிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பண மோசடியை தடுக்கும் பொருட்டு, வங்கிகள் உரிய ஆவணங்களை பராமரிக்கும் பொருட்டு, மத்திய அரசு  ஜூன் 1,2017 அன்று   GSR 538(E) என்ற எண் கொண்ட அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது. அதில் வங்கிகளில் புதிய கணக்கு துவக்க விரும்புபவர்கள் மற்றும் தற்பொழுது கணக்கு உள்ளவர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் நிரந்தர கணக்கு எண் (பான் அட்டை எண்) இரண்டையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையானது மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்டதே ஒழிய, ரிசர்வ் வங்கி இது தொடர்பாக எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமே மத்திய அரசின் ஆறு திட்டங்களுக்கு மட்டுமே ஆதார் எண்னை இணைக்க வலியுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட போதிலும், மத்திய அரசு ஐம்பதுக்கும் மேலான திட்டங்களுக்கு ஆதாரை இணைக்கச் சொல்லி  வற்புறுத்தி வருவது கவனிக்கத்தக்கது.

ஆதார் சட்டப் பிரிவு 7-ன் படி மத்திய அரசு வழங்கும் நிதி உதவியினைப் பெற மட்டுமே ஆதார் எண் தேவை என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தங்களுடைய சொந்த பணத்தினை மட்டுமே பயன்படுத்துவதற்கு ஆதார் எண் கேட்கப்படுவது என்பது கேள்விக்குரிய ஒன்றாக  இருக்கிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.