பனாஜி: தந்தை மொபைல் வாங்கித் தர மறுத்ததால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவா மாநில தலைநகர் பனாஜியிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள கிராமம் சங்கலிம். இந்த கிராமத்தில்தான் நேற்று அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 17 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையிடம் தனக்கு ஒரு மொபைல் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரது தந்தை மறுத்து விட்டு, அந்த பெண்ணின் சகோதரியை கல்லூரியில் கொண்டு விட சென்று விட்டார்.
இதன் காரணமாக அந்த இளம்பெண் மிகவும் வருத்தத்துடன் இருந்துள்ளார். அவரது தாய் குளிக்கச் சென்ற சமயத்தில் அந்த பெண் தனக்குத் தானே நெருப்பு வைத்துக் கொண்டுள்ளார். குளியல் அறையிலிருந்து அவரது தாய் வந்து பார்த்த பொழுது, இளம்பெண் நெருப்பில் சிக்கி தவித்துக் கொண்டுள்ளார். உடனடியாக அவரை கிராம சமுதாய சுகாதார மையத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்தப் பெண் இறந்து விட்டார்.
இது தொடர்பாக சங்கலிம் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


