/

வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்

குஜராத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை திங்கள்கிழமைவெளியிட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:13 pm

Raghavendran

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14-ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. டிசம்பர் 18-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், 2-ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை கடைசி நாளாகும். இதையடுத்து பாஜக 6-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும், காங்கிரஸ் கட்சி 4-ஆம் கட்டமாகவும் வேட்பாளர் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டன. 

இதில், பாஜக சார்பில் 34 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலும், காங்கிரஸ் சார்பில் 15 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டன.

முன்னதாக, 17-ந் தேதி 70 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக. பின்னர் 18-ந் தேதி 36 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலையும், 20-ந் தேதி 28 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலும், 4-ஆம் கட்டமாக ஒரு வேட்பாளர் அடங்கிய பட்டியலை வெளியிட்டு பாஜக அறிவித்தது.

குஜராத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ், முதல்கட்டமாக 77 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பின்னர் அதில் இடம்பெற்றிருந்த 4 பேரை மாற்றம் செய்து அறிவித்தது. இதையடுத்து 21-ந் தேதி 13 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும், 26-ந் தேதி 76 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.

முதல்கட்ட தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் மனுதாக்கல் செய்ய கடைசி நாளாக நவம்பர் 21-ந் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.