/

பாஜக எம்.பி காரில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் யஷ்வந்த் சிங் காரில் இருந்த ரூ.2 லட்சம் வெள்ளிக்கிழமை திருடப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:12 pm

Raghavendran

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் யஷ்வந்த் சிங் காரில் இருந்த ரூ.2 லட்சம் திருடப்பட்டது.

தில்லியில் உள்ள பிரதான சாந்தினி சௌக் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த யஷ்வந்த் சிங் காரில் இச்சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதி காவல்துறையிடம் யஷ்வந்த் சிங் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

மேலும், சம்பவம் நடந்தபோது நிறுத்தப்பட்டிருந்த எம்.பி. காரில் அவரது ஓட்டுநர் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்களில் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்தபோது மற்றொருவர் பணத்தை திருடியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

முன்னதாக, இதே தில்லியில் சட்டப்பேரவை வளாகத்தின் முகப்பில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வர் கெஜரிவால் பயன்படுத்தும் நீல நிற வேகன் ஆர் ரக கார் திருடப்பட்டு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதுபோல, அக். 12-ந் தேதி தில்லியைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஜிபேஷ் குமாரிடம் இருந்த ஐஃபோன் அவரது இல்லத்தின் அருகிலேயே நடைப்பயிற்சி செய்யும் போது பைக்கில் வந்த மர்ம நபர்களால் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.