தலைக்கவசம் அணியாத கர்நாடக அமைச்சருக்கு அபராதம்!
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த கர்நாடக அமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


கர்நாடக அமைச்சர் ப்ரமோத் மாதவ்ராஜ் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த காரணத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டது.
அமைச்சர் ப்ரமோத், ப்ரம்மவாரா என்ற மாவட்டத்தில் உள்ள கார்ஜி என்ற கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். அப்போது அவர் தலைக்கவசம் அணியவில்லை.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதன்காரணமாக அமைச்சர் மீது ப்ரம்மவாரா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் விதி எண் 177, 1988-ன் அடிப்படையில் அமைச்சர் மீது விதிமீறல் வழக்குப் பதிவிடப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் ப்ரமோத் நேரில் ஆஜராகி அபராதத் தொகையான ரூ.100-ஐ செலுத்தியதாக உடுப்பி எஸ்.பி. சந்ஜீவ் பாடில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...