டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

குஜராத் மீனவர்கள் பாக். கடற்படையால் சிறைபிடிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்த குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சனிக்கிழமை சிறைபிடித்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:06 pm

Raghavendran

இந்தியா, பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள கடற்பகுதியில் குஜராத் மீனவர்கள் மீன்படித்து வந்தனர். 

அப்போது அங்கு மீன்படித்த சிலர் இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குச் சென்று மீன்பிடித்துள்ளனர்.

இதன்காரணமாக அந்த மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை சிறைபிடித்துள்ளது.

கட்ச் தீவுகளின் அருகில் வெள்ளிக்கிழமை இரவு ஜகாவு கடற்பகுதியில் உள்ள ஐ.எம்.பி.எல். என்ற இடத்தில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான எல்லைப்பகுதியில் மீன்பிடித்த 55 குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 9 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். 

இதுபோன்று எல்லை தாண்டி மீன் பிடித்த விவகாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 79 குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 13 படகுகள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.