கலபுராகி (கர்நாடகா): ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மின்சார ரயில் என்ஜின் ஒன்று ஓட்டுநர் இல்லாமல் ஓடத் துவங்க, நிலைய ஊழியர்கள் அதனை சினிமா பாணியில் 13 கிலோ மீட்டர் பைக்கில் துரத்திப் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னையிலிருந்து மும்பை செல்லும் மின்சார எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று மதியம் மூன்று மணி அளவில் கர்நாடகாவின் கலபுராகி மாவட்டத்தில் உள்ள வாடி ரயில் நிலைய சந்திப்புக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து மகாராஷ்டிராவின் சோலாப்பூர் செல்லும் பாதையானது மின்மயமாக்கப்படாததால், அந்த ரயிலுடன் டீசல் என்ஜின் இணைக்கப்படுவது வழக்கம். அதற்காக ரயில் அங்கு நின்று கொண்டிருந்தது
சிறிதுநேரத்தில் எப்பொழுதும் போல டீசல் என்ஜின் இணைக்கப்பட்டவுடன் அந்த ரயிலானது வாடி சந்திப்பிலிருந்து, சோலாப்பூர் நோக்கி புறப்பட்டது. அதே நேரம் கழற்றி விடப்பட்ட மின்சார ரயில் என்ஜினில் இருந்து ஓட்டுநர் கீழே இறங்கி விட்டார். சிறிது நேரத்தில் அந்த என்ஜின் பெட்டியானது தனியாக நகரத் துவங்கியது.
இதைக் கண்ட ஓட்டுநர் மற்றும் வாடி நிலைய ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அதன் பாதையில் இருந்த நிலையங்கள் உஷார் படுத்தப்பட்டு, சிக்னல்கள் கிளியர் செய்யப்பட்டன.அத்துடன் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ரயில்களும் நிறுத்தப்பட்டன.
அத்துடன் ஊழியர்கள் உடனடியாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் அந்த பெட்டியினைத் துரத்திச் சென்றனர். முடிவில் நல்வர் என்ற இடத்தில், பெட்டியின் வேகம் கொஞ்சம் கட்டுப்பட்ட பொழுது அதில் தாவி ஏறி, அதன் இயக்கத்தை நிறுத்தினர். எனினும் அதற்குள் அந்த மின்சார ரயில் என்ஜின் 13 கிலோ மீட்டர் தொலைவினை கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்த சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாய் சுதர்சன் அரைசதம் விளாசல்; குஜராத் டைட்டன்ஸுக்கு 4-வது வெற்றி!

பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுக்கிறது காங்கிரஸ், திரிணமூல் : அமித் ஷா
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக லக்னௌ பந்துவீச்சு!

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 4வது காலாண்டு லாபம் 5% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


