டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஸ்வீடன் இரவு விடுதியில் வெடிவிபத்து

ஸ்வீடனில் செயல்பட்டு வரும் இரவு விடுதி ஒன்றில் பயங்கர வெடிவிபத்து வெள்ளிக்கிழமை ஏற்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:02 pm

Raghavendran

ஸ்வீடனில் உள்ள மால்மோ என்ற பகுதியில் செயல்பட்டு வரும் இரவு விடுதி ஒன்றில் வெள்ளிக்கிழமை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு ஸ்வீடன் காவல்துறை விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவித்ததாவது:

இந்த வெடி விபத்தின் பின்னணி இதுவரையில் தெரியவில்லை. எனவே அதுகுறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த இரவு விடுதியின் உரிமையாளருடன் தொடர்ந்து பேசி வருகிறோம். 

மேலும் அவருக்கு வேறு ஏதாவது பிரச்னை உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். ஆனால், தற்போதைக்கு இந்த வெடி விபத்து தொடர்பான எந்த காரணமும் தெரியவில்லை. 

இந்த விபத்தில் வேறு எதாவது நோக்கம் இருக்குமா என்று சந்தேகிக்கிறோம். விபத்து காரணமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. உயிர்ச்சேதங்கள் எதுவும் இல்லை. இவ்விகாரம் விரைவில் விசாரித்து முடிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.